இந்திரஜா தாலியை விற்றுதான்..கடன்சுமையில் மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம்!! கொந்தளித்த பிரபலம்..
ரோபோ ஷங்கர்
கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரோபோ ஷங்கர் மரணமடைந்தது சினிமாத்துறையினர் உட்பல பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ரோபோ ஷங்கர் குறித்தும் அவரது இறுதி சடங்கில் அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தது. இதுகுறித்து விஜய் டிவியில் பிரபல நாஞ்சில் விஜயன் அளித்த பேட்டியொன்றில் சில விஷங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நாஞ்சில் விஜயன்
அதில், ரோபோ ஷங்கரின் இறப்பை, யாராலும் ஈடுசெய்யமுடியாத இழப்பு. குடும்பத்தினர் மட்டுமில்லாமல் பொதுமக்களும் ஒரு நல்ல மனிதரை இழாந்துவிட்டோம் என்று வருத்தப்பட்டு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அதைத்தாண்டி அவருடன் நெருங்கி பழகி எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இன்று நான் பேட்டிக் கொடுக்க காரணம், சமூகவலைத்தலத்தில் பலரும் வாய்க்கு வந்தபடி பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தான் பேட்டிக்கொடுக்க வந்தேன். ரோபோ ஷங்கரின் மரணத்திற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்று சொல்கிறார்கள். அதுவும் ஒரு காரணமே தவிர, அதுமட்டும் தான் காரணமில்லை. அவர் மேடை கலைஞராக இருந்தபோது அவர் உடம்பில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு, ஓயாத உழைப்பு இப்படி எல்லாம் சேர்ந்து தான் அவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.
மரண விளிம்பிக்கு சென்ற அவரை போராடி மீட்டெடுத்தவர் அவரது மனை பிரியங்கா. கடந்த இரு ஆண்டுகளாக அவருக்கு சரியான வேலை வாய்ப்பில்லை. வளசரவாக்கத்தில் அவர் இருக்கும் வீட்டுக்கு மட்டுமே இரு லட்சம் ரூபாய் மாதம் இஎம்ஐ கட்ட வேண்டும். வாய்ப்பில்லை என்றால் அவர் என்ன செய்வார். இதற்காகவே அவர் ஓடிஓடி உழைத்தார். அவரால் பிரபலமான தொலைக்காட்சி கூட அவருக்கு வாய்ப்பு தரவில்லை. இப்போது கலைஞர்களின் நிலை இதுதான்.
இந்திரஜா தாலியை விற்று
22 வயதே ஆன ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா, மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் முன்புபோல் வருமானம் இல்லாததால், பல பிரமோஷனை இந்திரஜா செய்ததையும் விமர்சித்தனர். ரோபோ ஷங்கரின் மருத்துவமனை செலவு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு பணத்தை செலவு செய்து தான் பிரியங்கா அக்கா அவரை மீட்டு வந்தார்.
மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்கப்பட்டபோது, மருத்துவ செலவிற்காக கஷ்டப்படும் போது இந்திரஜாவின் தாலி, அணிந்த அணிகலன்கள் மற்றும் கார்த்திக் அணிந்திருந்த செயின், மோதிரம் அனைத்தையும் கழட்டி கொடுத்து தான் மருத்துவ செலவு செய்யப்பட்டது. ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு எந்த பிரச்சனையும் என்று நினைக்கக்கூடாது.
அவர்கள் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் தான் இருக்கிறது, அதேபோல் ரோபோ ஷங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடியது வேதனையின் உச்சத்தில் ஆடினார். தன் கணவருக்கு பிடித்ததை கடைசியாக செய்தார். அதை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள் என்று நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ளார்.