இட்லி கடை படம் கோயம்புத்தூர் செஃப் கதையா!! தனுஷை கேள்விக்கேட்ட கோபி - சுதாகர்..
இட்லி கடை
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 1 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள படம் தான் இட்லீ கடை. ஜி வி பிரகாஷ் குமார் இசையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யவுள்ள இப்படத்தில், நடிகை நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பார்த்திபன், ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். செப்டம்பர் 25 ஆம் தேதி திருச்சி நடந்த நிகழ்ச்சியில், யூடியூபர் கோபி - சுதாகர், தனுஷிடம் சில கேள்விகளை கேட்டுள்ளனர்.
அதில் கோபி, கோவையை சேர்ந்த ஒரு செஃப் வாழ்க்கை வரலாறு தான் இட்லி கடை படத்தோட கதைன்னு போஸ்டர் பார்த்து சிலர் கூறுகிறார்கள், உண்மையா சார் என்று கேட்டுள்ளார்.
என்னுடைய கற்பனை
அதற்கு தனுஷ், அதெல்லாம் இல்லை, இது என்னுடைய கற்பனை கதை, அதில் என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த சில மனிதர்களின் கதாபாத்திரங்களை வைத்து எடுத்துள்ளே என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் இது மாதம்பட்டி ரங்கராஜின் பயோபிக் இல்லை என்பது உறுதிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். ஏற்கனவே இட்லி கடை படத்தின் கதை என்னுடைய வாழ்க்கையை வைத்து தனுஷ் எடுத்துள்ளார் என்று மாதம்பட்டி ரங்கராஜ் நோட்டீஸ் அனுப்பி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
Gopi: I saw a Post like #Idlikadai is a Biopic of a Chef from Coimbatore (#MadhampattyRangaraj 🧐)#Dhanush : No No, it's purely my imagination Charcter 👍
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) September 25, 2025
pic.twitter.com/lo9QDg7IdM