விஜயகாந்த் உடலை கூட எட்டிப்பார்க்காத வடிவேலு!! கண்டித்து பேசிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவின் வைகைப்புயல் என்ற பெயரோடு ஜொலித்து வரும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல கலைஞர்கள் நடித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தாலும் வடிவேலு தங்களுக்கு துரோகம் தான் செய்து வந்தார் என்று அவருடன் நடித்த பல கலைஞர்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். மேலும் தன்னை வளர்த்து தூக்கிவிட்ட விஜயகாந்த் அவர்களையும் மோசமான பேசி பகையை வளர்த்துக்கொண்டார்.
அதேபோல் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தும் இறுதி சடங்கில் பங்கேற்பாரா வடிவேலு என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கூட, வடிவேலு இறுதி சடங்கிற்கு வராமல் இருந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் தொண்டர்கள் கடுமையாக வடிவேலுவை திட்டித்தீர்த்து வந்தனர்.
இந்நிலையில் பிரபல நடிகர் நெப்போலியன், விஜயகாந்த் பற்றி பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு விஜயகாந்தின் இறுதி சடங்கிற்கு கூட வராதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டத்து. அதற்கு அவர், தெரியவில்லை, நான் அமெரிக்காவில் இருப்பதால் யார் வந்தார்கள் வரவில்லை என்பது தெரியாது. எதுவாக இருந்தாலும், வடிவேலு வராமல் இருந்திருந்தால் தவறுதான்.
எந்த காரணம் சொன்னாலும் ஒத்துக்கொள்ள முடியாது. வெளியூரில் இருப்பதால் வரமுடியாத சூழல் இருந்தால் பரவாயில்லை, ஆனால் உள்ளூரில் இருந்துகிட்டே வராமல் இருப்பது தவறுதான். குறிப்பாக விஜயகாந்த்-ஆல் வடிவேலு வளர்க்கப்பட்டவர், அவசியம் வந்திருக்கனும், என்ன காரணம் தெரியாது, எனக்கும் வடிவேலு நண்பர் தான், நானே கூப்பிட்டு சொல்லி இருப்பேன், ஏன் போகவில்லை.
ஒரு மாதத்திற்கு முன் வடிவேலு விஜயகாந்தை சந்தித்ததாக செய்தி எனக்கு வந்தது என்றும் அது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை என நெப்போலியன் தெரிவித்திருக்கிறார்.