மூளைக்கு பதிலா தார் இருக்கு போல! ரோடு கூட ஒழுங்கா போட தெரியல..

viralvideo highwayroad
By Edward Jan 12, 2022 08:25 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மிகப்பெரிய குறையாக அடிக்கடி கூறப்படுவது சாலை புகார் தான்.

ஒரு ஆண்டுகூட தாங்காத தார் சாலைகள் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.

அப்படி கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் போடப்பட்ட சாலை, தார்கள் கையில் எடுத்தாலே பெயர்ந்து கொண்டு வந்துள்ளது. இதை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த வீடியோவில் ஒருவர் ஆளும் கட்சியை குறை கூறுவது போன்றுள்ளது. இதை பலர் தேசிய நெடுஞ்சாலையை யார் பார்ப்பார்கள் என்று உங்களுக்கு தெரியாதா? என கேள்வி கேட்டு வருகிறார்கள்.