சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் நாட்டாமை பட டீச்சர் மகள்
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
நாட்டாமை படம்
டீச்சர் என்று சொன்னதும் நாம் படித்த பள்ளி ஆசிரியர்கள் நியாபகம் வந்தாலும் சினிமா ரசிகர்களுக்கு டீச்சர் என்றால் அந்த நாயகி தான் நியாபகம் வருவார். அவர் வேறு யாரும் இல்லை நாட்டாமை பட புகழ் ராணி தான்.
டீச்சராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் அடுத்தடுத்து கர்ணா, அவ்வை சண்முகி, ஜெமினி போன்ற படங்களில் நடித்திருந்தார். அப்படியே சின்னத்திரையிலும் களமிறங்கியவர் தொடர்ந்து நடித்து வந்தார்.

தற்போது அவரது மகள் தார்னிகா, விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளாராம். இந்த தகவல் அறிந்ததும் அட நம்ம நாட்டாமை டீச்சர் மகளா இவர் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
