அவர்களை முட்டாளா ஆக்கிவிட்டேன்.. குற்ற உணர்ச்சியாக இருக்கிறது!! பேட்ட படம் குறித்து நவாசுதீன் வருத்தம்
நவாசுதீன்
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன், கடந்த 2018 -ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
வருத்தம்..
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நவாசுதீன் பேட்ட படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், "நான் ரஜினிகாந்த் உடன் பேட்ட படத்தில் நடித்த பிறகு எனக்கு மிகுந்த குற்ற உணர்ச்சியில் இருந்தேன். காரணம் என்னவென்றால், நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாத ஒரு விஷயத்துக்காக பணம் பெற்று கொண்டதாக எனக்கு எண்ணம் தோன்றியது".
"நான் அங்கு வெறுமனே வாயசைத்துக் கொண்டுதான் இருந்தேன. மேலும் எனக்கு அங்கு நடந்த பல விஷயங்கள் சரியாக புரியவில்லை. நான் அவர்களை முட்டாளாக ஆக்கிவிட்டேன். இந்த விஷயம் எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியாக இருந்தது" என்று நவாசுதீன் கூறியுள்ளார்.