தீபிகா படுகோனேவுக்கே டஃப் கொடுக்க போகும் நயன் தாரா!! லீக்கான ஜவான் காட்சி..
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு நடிகை நயன் தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வந்தார்.
அதன்பின் திருமணமாகி ஜவான் ஷூட்டிங்கினை தொடர்ந்து நடித்து வந்துள்ளார். சமீபத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அப்படத்தில் தீபிகா படுகோன் எல்லைமீறிய கவர்ச்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதேபோல் நடிகை நயன் தாராவும் பிகினி ஆடையணிந்து நடிப்பார் என்ற தகவலும் வெளியானது.
இதனை தொடர்ந்து, ஷாருக்கான், நயன் தாராவின் டூயர் பாடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நடுக்கடலில் எடுக்கப்பட்ட அந்த ஷூட்டின் காட்சிகள் இணையத்தில் தற்போது லீக்காகியிருக்கிறது.

ஏற்கனவே படப்பிடிப்பு புகைப்படங்கள் லீக்காகி வரும் நிலையில் தற்போது நயன் தாராவின் டூயட் காட்சிகள் வெளியாகியது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.