திருமணத்தால் தயாரிப்பாளர் போட்ட கறார் கண்டீசன்.. நயன் தாரா கொடுத்த ரியாக்ஷன்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம்
காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ஹிட் கொடுத்த அடுத்த மாதமே திருமணம் செய்து கொண்ட நயன் தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு கணவருடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். இப்படத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார் நயன் தாரா.
ஒரு நடிகை திருமணம் செய்து கொண்டால் அடுத்து அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுவதை விட அவரது மார்க்கெட் குறைய தான் ஆரம்பிக்கும். அப்படி விக்னேஷ் சிவனை காதலிக்கும் போது எப்போது நயன் திருமணம் செய்து கொள்வார் என்ற அச்சம் அவரை வைத்து தயாரிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருக்கும்.
தயாரிப்பாளர் கே எஸ் ஸ்ரீநிவாசன்
அதேபோல் தான் 2010ல் நயன் தாரா, ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நயன்தாரா மீது அப்படத்தின் தயாரிப்பாளர் கே எஸ் ஸ்ரீநிவாசன் பயத்தில் இருந்துள்ளார். அதாவது அப்படத்தில் நடிகை நயன் தாரா அனுகிய போது அக்ரிமெண்டுடன் படம் முடியும் வரை நீங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற கண்டீசனும் எழுதியிருக்கிறார் தயாரிப்பாளர். இதனை பார்த்த நயன் தாரா சிரித்துவிட்டு இது தான் சரி, நானே தயாரிப்பாளராக இருந்திருந்தால் இதை தான் செய்வேன் என்று கூறியிருக்கிறாராம் நயன்.