இனிமேல் ஆண்ட்டி சூப்பர் ஸ்டார் தான்.. பார்ட்டியில் நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகை திரிஷா?

Nayanthara Trisha Ponniyin Selvan: I
By Edward Jul 13, 2022 12:15 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2002ல் வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். மிஸ் சென்னை பட்டத்தை வென்று ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடிக்க ஆரம்பித்தார்.

அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷா நிச்சயம் வரை சென்று சில காரணங்களால் அதை தூக்கி எறிந்தார். அதன்பின் மார்க்கெட்டை இழந்து கனவுக்கன்னி என்ற பெயரை கெடுத்துக்கொண்டார்.

இனிமேல் ஆண்ட்டி சூப்பர் ஸ்டார் தான்.. பார்ட்டியில் நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகை திரிஷா? | Nayantahra Is An Anti Superstar Trisha Troll Party

தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கொடுத்துள்ளது. இதனால் திருமணமாகிய நயன்தாராவிற்கு அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை திரிஷா பெறுவார் என்றும் கூறப்பட்டது.

அதற்கு காரணம் 39 வயதாகியும் இளமையுடன் இருக்கும் திரிஷாவின் அழகு தானாம். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நிகழ்ச்சி முடித்துவிட்டு தோழிகளுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு கொண்டாடியிருக்கிறாராம் திரிஷா.

இனிமேல் ஆண்ட்டி சூப்பர் ஸ்டார் தான்.. பார்ட்டியில் நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகை திரிஷா? | Nayantahra Is An Anti Superstar Trisha Troll Party

அப்போது நயன்தாராவின் திருமணம் குறித்தும் திருமணத்திற்கு பின் அவரது மார்க்கெட் குறித்தும் கிண்டலாக பேசப்பட்டதாம். அப்போது தோழிகள் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா என்று கூறியுள்ளனர்.

அதற்கு திரிஷா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை ஆண்ட்டி சூப்பர் ஸ்டார் என்று கலாய்த்து அசிங்கப்படுத்தி இருக்கிறாராம். இந்த விசயம் எப்படியோ இணையத்தில் பரவ திரிஷாவை நயன் தாரா ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery