கர்வத்தால் 65 வயதான நடிகரை ஏமாற்றி அவமானப்படுத்தினாரா நயன்தாரா? திரும்பவும் அதை தான் செய்வாங்கலோ!

ladysuperstar tollywood chiranjeevi nayantara
By Edward Aug 17, 2021 04:28 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை குறுகிய காலகட்டத்தில் வாங்கியவர் நடிகை நயன் தாரா. ஆரம்பகாலத்தில் தன் படவாய்ப்பிற்கும் படத்தின் நிகழ்ச்சிகளுக்கும் வம்புக்கென்றே சென்று வருவார் நயன் தாரா. அதுவும் காதலித்தவர்களுடன் ஜோடிப்பொட்டு தான் செல்வாராம்.

அப்படி இருந்த நடிகை நயன் தாரா பல ஆண்டுகளாக நடித்து வரும்படங்களுக்கு பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் எங்குமே கலந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயர் கிடைத்ததும் இப்படி நடந்து கொண்டு ஆளே மாறி தூக்கிவிட்டவர்களை மதிக்காமல் இருந்து கிசுகிசுக்கப்பட்டார் நயன் லேடி. அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் அவரது நடிப்பில் நெற்றிக்கண் சமீபத்தில் வெளியானது. அப்படத்தின் பிரமோஷனுக்காக தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுத்துள்ளார் நயன்.

தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் மூன்றாவது முறையாக நடிக்கவுள்ளதாக செய்திகள் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் சிரஞ்சீவி,நயன் தாரா, தமன்னா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த படம் சைரா நரசிம்ம ரெட்டி. அப்படத்தின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்தியும் வந்தனர். ஆனால் நயன் தாரா மட்டும் போகவில்லை. முன்பே படக்குழு கூப்பிட்டு வந்ததை தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவியும் போன் செய்து கூப்பிட்டுள்ளார்.

வருகிறே வருகிறேன் என்று அவருக்கு பதிலளித்த நயன், நிகழ்ச்சியின் கடைசி வரை வராமலே ஏமாற்றியுள்ளார். அப்படியிருக்க நயன் தாராவை ஏன் திரும்ப கமிட்டாக்கினீர்கள் என்று பலர் விமர்சித்து வருகிறார்கள்.