லவ் பண்ணதுக்கு இது தேவை தான்! காதல் இயக்குநரால் அடித்துக்கொள்ளும் முன்னணி நடிகை..

love nayantara vignesh shivan
By Edward Apr 26, 2021 10:00 AM GMT
Report

தென்னிந்திய நடிகைகள் முன்னணி நடிகையாக மாறும் நிலை தற்போது சாதாரண ஒன்றாகிவிட்டது. அந்தவகையில் குறுகிய காலகட்டத்தில் வாய்ப்பினை பயன்படுத்தி மேலே வரும் சூழலில் கிசுகிசுக்களிலும் சிக்கி தவிப்பார்கள்.

அப்படியாக தென்னிந்திய ரசிகர்களை தன் கைக்குள் அடைத்து வைத்திருக்கிறார் அந்த அம்மணி. ஆரம்பத்தில் பல கஷ்டங்கள் காதல் தோல்விகள் என மாட்டி வந்து பின் தற்போது ஆறுதல் கூறிய இயக்குநருடன் 5 வருட காதலில் இருந்து ஊர் சுற்றியும் வருகிறார். பல வெற்றி படங்களை கொடுத்த அந்த நடிகையின் காதலர் சமீபகாலமாக சின்ன சின்ன படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறாராம்.

இது தேவையில்லாத ஆணி என ஆரம்பத்திலேயே அந்த நடிகையை சொன்னாலும் தன்னுடைய அன்பால் அந்த நடிகையின் மனதை மாற்றி தற்போது பல சிக்கலில் மாட்டி விட்டாராம். நடிகையின் பாதி பணம் புதிய படங்களை வாங்கியதில் சிக்கிக்கொண்டதாம். தற்போதைக்கு அந்த படங்கள் வெளியாகவும் வாய்ப்பில்லை. ஓடிடியிலும் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.

இதனால் தன்னுடைய பணம் போச்சே என கவலையில் உள்ளாராம் அந்த நடிகை. காதல் மயக்கத்தில் காசு போச்சாம். ரியல் எஸ்டேட் பிசினஸில் ஆர்வம் கொண்டிருக்கும் அந்த நடிகை தற்போது சென்னையில் பல கோடி மதிப்பிலான இடங்களையும் கட்டிடங்களையும் வாங்கி குவித்து வருகிறாராம். அதெல்லாம் வேலைக்கு ஆகாது என காதலரின் பேச்சை நம்பி மோசம் போய் விட்டாராம்.

படம் எடுக்கவும் தெரியல, பிசினஸ் பற்றியும் தெரியல என்று புலம்பி வருகிறாராம். ஆனால் ஜோடியாக ஊர் ஊராய் விமானத்தில் பரப்பது மட்டும் விடவில்லையாம்.