நயன்தாரா நம்பர் 1, சமந்தா நம்பர் 2.. அதுவும் இந்த விஷயத்தில்

samantha salary nayanthara
By Kathick Mar 05, 2022 09:30 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில், மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஒரு படத்திற்கு அவரது சம்பளம் மட்டுமே சுமார் ரூ. 5 கோடி. சில வருடங்களுக்கு முன்பே ரூ. 3 கோடி சம்பளத்தை தொட்ட நயன்தாரா கடந்த சில படங்களாக ரூ. 5 கோடி வரை வாங்கி வருகிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் சில நடிகைகள் இருந்தாலும் அவர்களது அதிகபட்ச சம்பளம் ஒரு படத்திற்கு ரூ. 2 கோடி வரைதான் இருந்தது. இந்நிலையில், இப்போது நயன்தாராவுக்கு அடுத்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு சென்று தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா பிடித்துள்ளார்.

ஆம், நடிகை சமந்தா தற்போது ஒரு படத்திற்கு சுமார் ரூ. 3 முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதமூலம் நயன்தாராவிற்கு அடுத்த இடத்தை சமந்தா பிடித்துள்ளார்.