10 வருஷத்துக்கு பின் பிளேபாய் நடிகருடன் ரொமான்ஸ்!! திருமணத்திற்கு பின் நயன் தாரா எடுத்த அதிரடி
சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை நடிகைகள் திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று விலகிவிடுவார்கள். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் திருமணமாகி குழந்தை பெற்றாலும் சரி நடிப்பில் தீவிரம் காட்டுவது வழக்கமாகிவிட்டது.
அப்படி தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றப்பின்னும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வரும் நயன் தாரா பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் நயன் தாரா சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது. அப்படத்தினை உலக நாயகன் கமல் ஹாசன் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்நிலையில் நயன் தாரா கடந்த 2013ல் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். அப்படத்தில் நடிகர் ஜெய் காதலராக நடித்திருப்பார். தற்போது அந்த கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின் ஜோடி சேரவுள்ளதாம்.
இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளார்களாம். பல படங்கள் தோல்வியை கொடுத்து வந்த ஜெய்யின் பிறந்த நாள் ட்ரீட்டாக இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஜெய் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்த நிலையில் திருமணமான நயன் தாரா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று பயத்தை கொடுத்துள்ளது.