7 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ்! லேடி சூப்பர் ஸ்டார் எடுத்த அதிரடி முடிவு..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடிசூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிஅகி நயன் தாரா. 20 ஆண்டுகளாக தமிழின் முன்னணி நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது ஷாருக்கானுடன் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். மேலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னை விட 7 வயசு குறைவான நடிகர் பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு "லிஃப்ட்" என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் கவின்.

இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, அதே தயாரிப்பு நிறுவனம் கவினை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்