திருமணத்திற்கு பின் சேலையில் இருந்து குட்டை ஆடைக்கு மாறிய நயன்தாரா.. என்ன விக்கி இதெல்லாம்..

Nayanthara Vignesh Shivan
By Edward Aug 22, 2022 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் விஐபி படத்தின் மூலம் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறியப்பட்டவர் விக்னேஷ் சிவன். இதனையடுத்து கதையாசிரியராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

பின் சிம்புவ வைத்து போடா போடி படமும், விஜய் சேதுபதி, நயன் தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தார் விக்னேஷ் சிவன். இதன்பின் NGK, பாவக்கதைகள், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படத்தினை இயக்கினார்.

நானும் ரவுடி தான் படத்தின் போது நயன் தாராவுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலில் விழுந்தார். 7 ஆண்டுகளாக இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து ஜோடியாக சுற்றி வந்தனர். இதன்பின் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஹனிமுனுக்கு சென்றனர். ஒரு வாரத்திற்கு பிறகு இந்தியா வந்த இருவரும் தங்கள் பணிகளில் பிஸியாகினர். இதனையடுத்து விக்னேஷ் சிவன் நயன் தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயின் நாட்டுக்கு பறந்து அங்கு ரொமான்ஸ் செய்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

திருமணத்திற்கு பிறகு எப்போது சேலை, சுடிதாரில் சுற்றி வந்த நயன், தற்போது குட்டை ஆடையில் ஸ்பெயினில் சுற்றி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். என்ன விக்கி இதெல்லாம் என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவன் மீது பொறாமையில் கருத்துக்களை கூறி திட்டி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery