நயன்தாராவிற்கு இரட்டை குழந்தை பெற்றுக் கொடுத்த வாடகைத்தாய் இவரா.. உண்மையை கூறிய உறவுக்காரப் பெண்..
தென்னிந்திய சினிமாவில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி நடிகை நயன் தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளில் விவகாரம் தான். 7 வருட காதலுக்கு பின் ஜூன் மாதம் நயன் தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கரம் பிடித்தார். திருமணமாகி 4 மாதங்களுக்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார் நயன் தாரா.
இதனால் பல சட்டச்சிக்கல் பிரச்சனைகளை கடந்து தற்போது குழந்தைகளை வளர்த்து வருகிறார்கள் நயன் - விக்கி. இந்நிலையில் நயன் தாரா - விக்னேஷ் சிவனுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத்தாய் இவர் தான் என்று புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
திருமணத்திற்கு முன் நயன் தாரா - விக்னேஷ் சிவன் காலிகாம்பால் கோவிலுக்கு சென்று அங்கு சில புகைப்படங்களை ஒருசிலரோடு எடுத்துக்கொண்டனர். வைரலான புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி தான் வாடகைத்தாய் என்று கூறப்பட்டு செய்திகள் கசிந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ஷகீலா யூடியூப் சேனலுக்கு அந்த பெண்மணி பேட்டிக்கொடுத்து உண்மையை கூறியிருக்கிறார்.
விஷ்ணு தான் இவர் எனக்கு பல வருடங்களாக இவரை தெரியும் என்று ஷகீலா அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய விஷ்ணு, விக்னேஷ் சிவனின் அம்மா எனக்கு பல வருடங்களாக தெரியும். என் மகள் விக்னேஷ் சிவன் அம்மாவை ’அம்மம்மா’ என்று தான் கூப்பிடுவாள். அந்தளவிற்கு அவரது குடும்ப நண்பர்களாக இருந்து வந்தேன். வாரம் வாரம் பேரிஸில் இருக்கும் காலிகாம்பால் கோவிக்கு செல்வேன்.
அப்போது நானும் அங்கு சென்றதால் விக்கேஷ் சிவன் - நயன் தாரா வந்திருப்பதை தெரிந்து அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஆனால் அதை அனைவரும், யார் என்ன என்று தெரியாமல், நான் தான் வாடகைத்தாய், நயன் தாராவுக்கு கருமுட்டை கொடுத்தேன் என்று செய்திகளை போட்டுவிட்டார்கள்.
என் பிஞ்சி குழந்தையே என்னிடம் நீதான் நயன் தாராவுக்கு வாடகைத்தாய்-ஆ என்று கேட்டால். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை, நான் வாடகைத்தாய் கிடையாது என்று விஷ்ணு தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் அம்மாவிடம் எப்பவும் பேசி வருகிறேன், அவரே இதுபற்றி எதாவது பிரச்ச்னை வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஷகீலா மூலம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷ்ணு.