பொது இடத்தில் நயன்தாராவிடம் அந்த விஷயத்தை செய்த ரசிகர்.. கணவர் முன்பே இப்படியா
Nayanthara
Vignesh Shivan
By Kathick
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு நயன்தாரா சென்றதும் ரசிகர்கள் பலரும் அங்கு திரண்டு விட்டனர்.
அம்மன் ஆலயத்தில் வழிபாட்டை முடித்த கையோடு, ஐராதீஸ்வர் ஆலயத்திற்கு சென்றனர். அங்கும் நயன்தாராவை காணவேண்டும் என ரசிகர்களுடன் தாய்மார்கள் பலரும் காத்திருந்தனர். அவர்களை சந்தித்து முடித்தபின் ரயில் நிலையத்திற்கு சென்ற நயன்தாரா, ரயிலில் எறியபின் அங்கு இருந்து ரசிகர் ஒருவர் நயன்தாராவை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது கடுப்பான நயன்தாரா, போட்டோ அடுத்தவரை பார்த்து 'செல்போனை உடைத்துவிடுவேன்' என கூறினார். சாமி தரிசனம் போது ஏற்பட்ட டென்சன், ரசிகர்கள் அதிகமாக திரண்டதால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நயன்தாரா சற்று கோபப்பட்டுவிட்டார் என தெரிகிறது.