20 வருடங்களாக ஒதுக்கி வரும் பிரபல இயக்குனர்!! கூச்சமில்லாமல் மேடையில் வாய்ப்பு கேட்ட நயன் தாரா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் நடிகை நயன் தாரா. சமீபத்தில் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்பின் படங்களில் அதிக கவனம் செலுத்தி பிஸியாக இருக்கும் நடிகை நயன் தாரா, தனியார் ஊடகம் நடத்திய விருது விழாவிற்கு சென்று மேடையில் விருது வாங்கியப்பின் சில விசயங்களை பேசியுள்ளார்.

எப்போது நயன் தாரா மேடையில் தன் காதல் கணவர் மற்றும் ரசிகர்களை பற்றி மட்டுமே பேசி வருவார். ஆனால் இந்த விருதுவிழாவின் போது சற்று நயன் தாராவிடம் இருந்து மாற்றங்கள் காணப்பட்டது. நயன் தாரா யாரிடமும் வாய்ப்பு கேட்டு மேடையில் பேசியது கிடையாது.
அந்தவகையில் அந்த மேடையில் விருதினை வழங்கிய இயக்குனர் மணிரத்னம் அவர்களை பற்றி விடாமல் பேசியிருக்கிறார். மணிரத்னம் சார் இந்த விருதை கொடுத்தது எனக்கு பெருமை.
எல்லோருக்கும் ஒரு ட்ரீம் இருக்கும், ஒன்னு மணிரத்னம் மாதிரி இயக்குனராகிடனும் இன்னொன்னு அவர் இயக்கத்தில் நடிக்கனும் தான். ஒன்னு ரெண்டு படங்கள் இணைந்து செய்யவேண்டியது. ஆனால் அது நடக்க முடியாமல் போனது.
அவர் இயக்கத்தில் நடித்து அதற்கான விருதினை வாங்கினால் எனக்கு பெருமையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி மணிரத்னமிடம் வாய்ப்பு கேட்டு பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.