ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!! கமலை வைத்து கோடியில் புறள ஆசைப்படும் நயன்தாரா..
சினிமாவை பொறுத்தவரை திருமணமாகி குழந்தை பெற்ற நடிகைகள் அதுவும் 35 வயதை தாண்டிய நடிகைகளின் மார்க்கெட் மற்றும் வாய்ப்புகள் குறையும். ஆனால் நடிகை நயன் தாராவிற்கு மட்டும் அது அப்படியே மாறாமல் கூடிக்கொண்டு தான் போகிறது.
ஜவான் படத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி தன்னுடைய சம்பளத்தை 10 கோடியாக வாங்கி வருகிறார் நடிகை நயன் தாரா.
அதுவும் திருமணத்திற்கு பின் தன பங்கிற்கு நடிப்பது மட்டுமில்லாமல் அனைத்து இடத்திலும் தொழிலை துவங்கி கல்லா கட்டி வருகிறார். அழகு சாதனம் முதல், ரியல் எஸ்டேட் வரை நயன் பல தொழில்களை ஆரம்பித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் உருவாகவுள்ள KH234 படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா கமிட்டாகி அப்பட்த்திற்கான அட்வான்ஸ் தொகையை வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்காக சுமார் 12 கோடி சம்பளத்தை கேட்டும் இருக்கிறாராம். கோலமாவு கோகிலா படத்தின் போது 3.5 முதல் 5 கோடியாக வாங்கி வந்த நயன், கனெக்ட் தமிழ் படத்திற்காக 8 கோடி வாங்கினார்.
பாலிவுட் சென்றதும், ஜவான் படத்திற்காக 10 கோடியாக வாங்கி இருந்தார். தற்போது தன் பிசினஸ் அதிகரித்துள்ளதாக தமிழிலேயே 12 கோடியை கேட்டு வாங்கி கல்லாகட்டி இருக்கிறாராம்.