ரஜினி, விஜய்க்குன்னா கண்டீசன்!! திருமணத்திற்கு பின்அந்த நடிகருக்காக இப்படி மாறிய நயன்தாரா..

Nayanthara Gossip Today Bollywood Atlee Kumar Jawan
By Edward Aug 29, 2023 10:00 AM GMT
Report

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்து கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை நயன், தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ஹாருக்கான் - அட்லீ கூட்டணியில் ஜவான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மாடர்னான போல்ட் கேரக்டரில் நடித்துள்ள நயன் தாராவின் புதிய லுக் அனைவரையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மட்டும் பிரமோஷன் நிகழ்ச்சி பேட்டிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார் நயன்.

ஆனால் முன்னணி நடிகர்களுடன் நடித்த படத்தின் ஆடியோ லான்ச், பேட்டி, பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருகிறார்.

ஆனால் ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஆடியோ லான்ச்சில் நயன்தாரா கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி, விஜய் படங்களில், அதுவும் தமிழ் படங்களின் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளாத போது பாலிவுட் மார்க்கெட்டுக்காக நயன் தாரா தனது கொள்கையை மாற்றி இருப்பதை பலர் கலாய்த்து வருகிறார்கள்.