அட்லீ - ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன் தாரா!! ஜவான் விழாவுக்கு வராததுக்கு இதுதான் காரணம்..
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பின் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்பின் கமிட்டாகிய படங்களில் நடித்து வந்த நயன் தாரா, மிரட்டலான லுக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
ஷாருக்கான், அட்லீ, அனிரூத், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல இந்நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு வந்தனர். ஆனால் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நடிகை நயன் தாரா மட்டும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
பொதுவாக தான் தயாரிக்கும் படத்தின் நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்கையில் இருந்து வந்தார். ஆனால், ஷாருக்கானுக்காக நயன் தாரா வருவார் என்று பலர் காத்திருந்தனர்.
ஆனால் நயன் நிகழ்ச்சிக்கு வராமல் கேராளாவில் இருக்கும் தன் இரு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். ஓணம் பண்டிகை என்பதால் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் செலவிட்டு ஜவான் ஆடியொ லான்ச்சை தவிர்த்திருக்கிறார் நயன்.
