கழட்டிவிட்ட அஜித், கமல்!! கணவருக்காக 30 வயது நடிகருடன் இப்படியொரு ரோலில் நயன் தாரா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, அஜித், விஜய், சரத்குமார், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.
ஆனால் 20 வருட சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல் ஹாசனுடன் நடிக்காமல் இருந்து வருகிறார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் கமல் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் படத்தில் நயன் தாரா நடிக்கவிருந்தார்.
ஆனால் தயாரிப்பில் இருந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் பின்வாங்கியது. அந்த கூட்டணியில் தற்போது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க முன் வந்துள்ளது.
இந்நிலையில், அப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன் தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப டிராமாவாக இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த கூட்டணிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே அஜித் படத்தினை இயக்க இருந்த விக்னேஷ் சிவன் சில காரணங்களால் விலக்கப்பட்டு கமல் தயாரிப்பில் கமிட்டாகினார்.
ஆனால் கமல் ஹாசனும் கழட்டிவிட்ட நிலையில் நயன் தாரா கணவருக்கு ஆறுதலாக நானே இருக்கிறேன் என்று அவரது கதையில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.