விஜய்க்கு போட்டியாக இப்படியொரு முடிவா!! சென்னையில் பிரபல தியேட்டரை சொந்தமாக்கிய நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தற்போது அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். நயன் தாரா கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் 4 மாதம் கழித்து இரட்டை குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்ததும் அவர்களுடன் நேரத்தை செலவிட்டும் படங்களில் நடித்தும் வருகிறார்.
நயன் தாரா கணவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து சம்பாதித்து வருகிறார். அதேபோல் லிப்பாம் கம்பெனி நடத்தி தனியாக ஒரு தொழிலையும் செய்து வருகிறார். தற்போது, யாரும் நினைக்காத ஒரு விசயத்தை செய்யவுள்ளாராம்.
சென்னையில் பிரபல தியேட்டரில் ஒன்றாக இருந்து மூடப்பட்ட அகஸ்தியா திரையரங்கை சொந்தமாக வாங்கியிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த திரையரங்கில் புதிதாக இரண்டு தியேட்டர்களை கட்டவும் முடிவெடுத்திருக்கிறாராம்.
அடுத்த ஆண்டு இந்த தியேட்டர் திறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் விருகம்பாக்கத்தில் இருக்கும் நேஷ்னல் திரையரங்கை வாங்கி சந்திர மால் என காம்ப்ளக்ஸ்-ஐ கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
