என்னது நயன்தாராவுக்கு அண்ணன் உள்ளாரா.. துபாயில் என்ன செய்கிறார் தெரியுமா?

Nayanthara Tamil Cinema Actress
By Bhavya Aug 30, 2025 08:30 AM GMT
Report

நயன்தாரா

தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.

நயன்தாரா கைவசம் தற்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, Dear Students, MMMN, மூக்குத்தி அம்மன் 2, என பல திரைப்படங்கள் உள்ளது.

என்னது நயன்தாராவுக்கு அண்ணன் உள்ளாரா.. துபாயில் என்ன செய்கிறார் தெரியுமா? | Nayanthara Brother Work In Dubai

அண்ணன் உள்ளாரா? 

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால், அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கேரள குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன், அவரது அண்ணன் பெயர் லெனோ குரியன்.

சமீபத்தில், அவரது அண்ணன் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. தற்போது லெனோ துபாயில் தொழில் செய்து வருகிறாராம்.  

என்னது நயன்தாராவுக்கு அண்ணன் உள்ளாரா.. துபாயில் என்ன செய்கிறார் தெரியுமா? | Nayanthara Brother Work In Dubai