இரட்டை குழந்தைக்கு பிறகு தாலியை மாற்றிய நயன்தாரா.. இப்படியொரு விசயம் எப்போ நடந்துச்சு...
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஜூன் மாதம் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், ஷூட்டிங் என்று பிசியாக இருந்து வந்தார் நயன் தாரா.
வாடகைத்தாய் சர்ச்சை
கடந்த சில வாரங்களுக்கு முன் தங்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். திருமணமாகி 4 மாதத்தில் இரட்டை குழந்தையா என்று வாடகைத்தாய் விசயமும் சர்ச்சையாக எழுந்தது. இதற்கிடையில் தங்கள் குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி வாழ்த்தும் தெரிவித்தார்கள் நயன் - விக்கி. தற்போது இதுகுறித்து நயன் தாரா - விக்னேஷ் சிவன் தவறுகள் செய்யவில்லை என்று அறிக்கையை வெளியிட்ட சுகாதாரத்துறை.
தாலி மாற்றும் சடங்கு
இந்நிலையில் நயன்தாராவின் சமீபத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. தாலியுடன் இருந்த நயன்தாரா கயிரை எடுத்துவிட்டு செயினாக மாற்றியிருக்கிறார். தாலி மாற்றும் சடங்கு இடையில் எப்படி நடந்தது என்று ரசிகர்கள் கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.