ஜெட் விமானம் முதல் - லிப்பாம் கம்பெனி வரை!! கோடியில் புறளும் நயன் தாராவின் மொத்த சொத்து இவ்வளவா?
தமிழில் ஐயா, சந்திரமுகி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து, அறிமுகமாகிய இரு படங்கள் மூலம் டாப் இடத்தினை பிடித்தார் நடிகை நயன் தாரா. தற்போது லேடி சூப்பர் ஸ்டாராகவும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
கடந்த ஆண்டு காதலித்து வந்த விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது அட்லீ, ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஜவான் படத்திற்காக நயன் சுமார் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியானது. தற்போது நடிகை நயன் தாராவின் மொத்த சொத்து மதிப்பின் விவரம் வெளியாகியுள்ளது.
ஒரு படத்தில் 5 முதல் 10 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நயன் தாரா 200 கோடி அளவில் சொத்து வைத்துள்ளாராம். சில நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பேஸ்டராகவும் இருந்து வருகிறார்.
மேலும் லிப் பாம் கம்பெனி நடத்தியும் தி ரவுடி பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவருக்கென ஜெட் விமானம் முதல் விலையுயர்ந்த கார், விலையுயர்ந்த ஆடை அணிகள், நகைகள் வைத்துள்ளார் நடிகை நயன் தாரா.