திருமணத்திற்கு பின் அந்த விஷயத்தில் தொடர்ந்து சொதப்பும் நயன்தாரா.. முகம் மாறிப்போய் வெளிவந்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் சோலோ ஹீரோயினாக நடித்து ஹீரோக்களுக்கு நிகரான தனி மார்க்கெட்டை உருவாக்கியவர் நயன்தாரா. இவர் சோலோ ஹீரோயினாக நடித்து கடைசியாக வெளிவந்த நெற்றிக்கண், O2, கனெக்ட் ஆகிய மூன்று திரைப்படங்களும் படுதோல்வியடைந்துள்ளது.
திருமணத்திற்கு பின் நயன்தாராவின் நிலைமை இப்படி மாறிவிட்டதே, எல்லா படமும் சொதப்புகிறது என்று கூறி வருகிறார். இதனால் இனி கமிட் செய்யும் படங்களில் ஹீரோவுடன் இணைந்து ஹீரோயினாக மட்டுமே நடிக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் நயன்.
அதன்படி நயன்தாரா ஹீரோயினாக நடித்து வரும் திரைப்படம் தான் இறைவன். இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். இப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இதில் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இணைந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவின் முகம் அப்படியே மாறிவிட்டதே என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        