பத்திரிக்கையாளர் காலில் விழுந்த நயன்தாரா!.. பதறிப்போன பிரபலங்கள்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் மாயா, அறம், இமைக்கா நொடிகள் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து ஹிட் கொடுத்தார்.
தற்போது இவர் பாலிவுட் நட்சத்திர ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும் இவரை பற்றி பத்திரிகைகளில் மோசமான கருத்துக்கள் வெளியானது. இதனால் நயன்தாரா பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லையாம்.
ஒரு நாள் பாஸ் என்கிற பாஸ்கரண் படத்தின் பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர் ஒருவர் காலில் நயன்தாரா விழுந்தாராம். அதற்கு காரணம் நயன்தாரா சினிமாவிற்கு வந்த புதிதில் அவரை பற்றி அந்த பத்திரிகையாளர் பெருமையாக பேசியிருந்தாராம்.