விக்னேஷ் சிவனுடன் திருமணம்!! நயன்தாரா வேதனை.. அப்படி என்ன ஆச்சு?
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவரை தொடர்ந்து பல சர்ச்சைகள் வலம் வருவதை நம்மால் காணமுடிகிறது.
சமீபத்தில் கூட நயன்தாரா மற்றும் அவருடைய கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் ஆவணப்படத்திற்கு தனுஷ் என்.ஓ.சி கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி சர்ச்சையை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு பேட்டி கொடுத்த நயன்தாரா தன் திருமணம் குறித்தும் கணவர் குறித்தும் பேசியுள்ளார்.
நயன்தாரா பேட்டி
அதில், " சில நேரங்களில் நானும் என் கணவர் விக்னேஷ் சிவனும் ஒன்றாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.
அதற்கு முக்கிய காரணம் அவர் மிகவும் நல்ல மனிதர், ஆனால் நயன்தாராவின் கணவர் என்ற ஒரே காரணத்தினால் அவருக்கு பல கஷ்டங்கள் ஏற்படுகிறது.
அவர் ஒரு சிறந்த இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர் ஆனால், என்னை திருமணம் செய்து கொண்டதால் அந்த பெயர் அவருக்கு கிடைக்கவில்லை.
அந்த குற்ற உணர்ச்சி என்னை இன்று வரை பின் தொடர்கிறது. முதலில் என்னையும் அவரையும் ஒப்பிடுவது மிகவும் நியாயமற்றது" என்று தெரிவித்துள்ளார்.