ஜீவா அப்பாவிடம் பயங்கரமா திட்டு வாங்கிய நயன்தாரா!.. முக்கிய காரணமே முன்னாள் காதலர் தான்
மலையாளத்தில் நடித்து வந்த நயன்தாரா சரத்குமார் நடிப்பில் 2005 -ம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தின் வெளிவந்த படம் தான் ஈ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை ஜீவாவின் தந்தை ஆர் பி சௌத்ரி தயாரித்திருந்தார்.
இப்படத்தின் ஷூட்டிங்ன் போது நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார்களாம். அப்போது நயன்தாரா ஈ படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியாக வரமாட்டாராம். அங்கு சென்றாலும் நயன்தாரா சிம்புவுடன் மொபைல் போனில் பேசி வந்தார்களாம்.
ஒரு நாள் இவர்களின் காதலை அறிந்த இயக்குனர் படத்தின் தாமதம் குறித்து ஆர்.பி சௌத்ரியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்.பி சௌத்ரி நயன்தாராவை திட்டியுள்ளார். இதனால் பயந்து கொண்டு நயன்தாரா படத்தை முடித்து கொடுத்தாராம்.