அம்பானி மகளுடன் கைகோர்க்கும் நயன்தாரா.. காரணம் என்ன
Nayanthara
Isha Ambani
By Karthick Raja
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கைவசம் தற்போது 6 படங்களுக்கும் மேல் உள்ளது பிஸியாக படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாரா தொழிலதிபராகவும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா சினிமாவில் சம்பாதித்த பணத்தை தொழிலில் நிறைய முதலீடு செய்து வருகிறார். டீ விற்பனை நிறுவனம், நாப்கின் நிறுவனம் என முதலீடு செய்துள்ளவர் 9 Skin என்ற அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

தற்போது என்ன தகவல் என்றால் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது 9 Skin நிறுவனம் தயாரிக்கும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய சமீபத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.