ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடிச்சது.. அப்படி மீண்டும் நடிக்க மாட்டேன்..நடிகை அமலா பால்

Amala Paul Tamil Actress Actress
By Jai Sep 30, 2026 11:01 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை அமலா பால், திருமணமாகி ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். அதன்பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அமலா பால், கடந்த 2019ல் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் நடித்திருந்தார்.

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடிச்சது.. அப்படி மீண்டும் நடிக்க மாட்டேன்..நடிகை அமலா பால் | Aadai Was Challenging I Wouldnt Make That Decision

அப்படத்தை நடிகை அமலா பால், ஆடையில்லாமல் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார். இப்படம் குறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

ஆடை

அதில், இந்த கதையை கேட்டவுடன் உடனே, சம்பதிக்கவில்லை. கதையை இயக்குநர் அணுகிய விதம், அது வெறும் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா? அல்லது கதையின் தீவிரமான உணர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறதா? என்பதை புரிந்து கொள்ள எனக்கு 2 மாதங்கள் தேவைப்பட்டது.

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடிச்சது.. அப்படி மீண்டும் நடிக்க மாட்டேன்..நடிகை அமலா பால் | Aadai Was Challenging I Wouldnt Make That Decision

இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும் முழுமையாக நம்பிய பின்தான், இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஷூட்டிங்கின் போது மிகக்குறைந்த அளவிலான நபர்களே அங்கு இருக்க அனுமதிக்கப்பட்டது. படக்குழுவினர் எனக்கு முழு பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்தது.

இதனால் எந்த சங்கடமும் இல்லாமல் ஒரு படைப்பாக அதை செய்து முடிக்க முடிந்தது. அந்த துணிச்சலான முடிவை எடுத்தது எனக்கு பெருமை, ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில், அதே போல் ஒரு ரோலில் ஏற்று நடிப்பேனா என்று கேட்டால், கண்டிப்பாக மாட்டேன் என்றுதான் தோன்றுகிறது.

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடிச்சது.. அப்படி மீண்டும் நடிக்க மாட்டேன்..நடிகை அமலா பால் | Aadai Was Challenging I Wouldnt Make That Decision

வாழ்க்கையிலும் திரைப் பயணத்திலும் வயது, அனுபவத்திற்கு ஏற்ப முன்னுரிமைகள் மாறுவதே இதற்கு காரணம் என்றும் கூறியிருக்கிறார் நடிகை அமலா பால்.