திருமணத்திற்கு முன்பே நயன்தாரா கணவரை மாற்றிய நடிகர் சிம்பு!! விக்னேஷ் சிவன் கூறிய உண்மை..
போடா போடி படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதற்கு முன் டிசைனராகவும் விஐபி படத்தில் நடிகராகவும் திகழ்ந்து வந்த விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தினை இயக்கி மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தார்.
இப்படத்தின் மூலம் நடிகை நயன் தாராவை காதலித்து வந்த விக்னேஷ் சிவன் 7 வருடங்களாக அவருடன் டேட்டிங்கில் இருந்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தும் வந்துள்ளார். கடந்த ஆண்டு காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ்க்கு பின் நயன் தாராவை பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின் இருவரும் கேரியரில் கவனம் செலுத்தி வந்த நிலையில் 4 மாதம் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர். சமீபத்தில் இரு மகன்களின் பெயரை அறிமுகப்படுத்திய நிலையில் விக்னேஷ் சிவன், தனியார் இணையத்திற்கு பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் நடிகர் சிம்புவை பற்றியும் கூறியிருக்கிறார். நடிகர் சிம்பு, வரலட்சுமி நடிப்பில் போடா போடி படத்தினை இயக்கிய விக்னேஷ் சிவன் அப்படத்தில் தன்னை சிம்பு பல விசயங்களில் ஊக்கப்படுத்தியதாகவும், அதிகமாக ஊக்கப்படுத்த ஒரு பாடலை எழுத வேண்டும் என்ற நம்பிக்கை கொடுத்ததால் தான், விக்ரம் வேதா, ரெமோ, நானும் ரவுடி தான், என்னை அறிந்தால் போன்ற படங்களில் பாடலாசிரியாக ஹிட் கொடுக்க காரணம் என்றும் கூறியிருக்கிறார்.