நயன்தாரா செய்த செயல்.. முன்னணி நடிகையாக இருந்தாலும் இயக்குனரிடம் இப்படி பண்ணலாமா
தமிழ் சினிமாவில், ஆண்களில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் என்பதை போல, பெண்களில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடித்துள்ளனர். மேலும், தற்போது காட் பாதர் மற்றும் கனெக்ட் ஆகிய படங்களை நடிகை நயன்தாரா தனது கைவசம் வைத்துள்ளார். இதனுடைய படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக ரவிச்சந்திரன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா 10 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளாராம். தற்போது 5 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வரும் நயன்தாரா, தீடீரென இந்த படத்திற்காக 10 கோடி ரூபாய் கேட்டுள்ளது, இயக்குனரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னணி நடிகையாக இருந்தாலும், தீடீரென தனது சம்பளத்தை ஏற்றியது, ஓவர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.