மூன்று முடிச்சு போட்ட விக்னேஷ் சிவன்...திருமணமான மூனே மாசத்தில் நயன்தாராவுக்கு விழுந்த இடி?

Nayanthara Vignesh Shivan
By Kathick Sep 02, 2022 01:01 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை நயன்தாரா விரைவில் நடிப்பை விட்டு விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமே நயன்தாராவின் திருமணம் தானாம். ஆம், நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது தாலியை கழட்ட கூடாது என்று கூறியுள்ளார்களாம்.

மூன்று முடிச்சு போட்ட விக்னேஷ் சிவன்...திருமணமான மூனே மாசத்தில் நயன்தாராவுக்கு விழுந்த இடி? | Nayanthara Is Going To Quit Acting

இதனால், தற்போது நடித்து வரும் படங்களில் கூட நயன்தாரா தாலியை கழட்டாமல் தான் நடித்து வருகிறாராம். பல விதமான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்கும்போது கண்டிப்பாக தாலியை கழற்றி வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதினால், நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம்.

இதனால் புதிதாக எந்த ஒரு படத்தை நயன்தாரா கமிட் செய்யவில்லையாம். இந்த தகவல் நயன்தாராவின் ரசிகர்கள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.