சமந்தாவை வைத்து நயன்தாராவை அசிங்கப்படுத்திய இயக்குனர்.. இது அந்தர் பல்டி
காஃபி வித் கரண் மூன்றாவது எபிசோடில் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நடிகை சமந்தா கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கரண் ஜோகர், சமந்தாவிடம் தென்னிந்திய திரையுலகில் யார் நம்பர் 1 நடிகை என்ற கேள்வியை முன் வைத்தார்.
இதற்க்கு பதிலளித்த சமந்தா ' நயன்தாரா தான் தென்னிந்திய அளவில் நம்பர் 1 நடிகை ' என்று கூறினார். இதற்கு கரண் ஜோகர் நயன்தாராவின் பெயரை என்னுடைய லிஸ்டில் இல்லை என்று கூறினார். இதை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் கரண் ஜோகரை சமூக வலைத்தளத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.
இதனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் கொடுத்துள்ளார் கரண் ஜோகர். ஆரோமாக்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து தனக்கு கிடைத்த பட்டியலில் நம்பர் 1 நடிகை என்று சமந்தாவின் பெயர் தான் குறிப்பிட்டு இருந்தது, அதை வைத்து தான், கூறியதாக அந்தர்பல்டி அடித்துள்ளார் கரண். அதை நயன்தாராவின் ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டதாகவும் கரண் ஜோகர் விளக்கமளித்துள்ளார். இதன்முலம் இந்த சர்ச்சைக்கு புற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.