முதன் முதலில் சிம்புவுடன் தான் அது நடந்தது.. நயன்தாராவை அனுப்பிவைத்த இயக்குனர்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜித் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் முதல் முதலாக நடிகர் சிம்பு படத்தில் தான் நடிக்கவிருந்தார்.
VZ துரை இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தொட்டி ஜெயா படம் வெளியானது. இப்படத்தில் கோபிகா நடிக்க இருந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வானது நயன்தாரா தான்.
ஆனால் இந்த படத்தின் ஆடிஷனில் சரியாக நடிக்காத காரணத்தால் "உனக்கெல்லாம் நடிப்பு செட் ஆகாது நீ கிளம்புமா" என அனுப்பிவிட்டாராம் இயக்குனர். அதன் பிறகு நயன்தாராவுக்கு சரத்குமாரின் ஐயா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பல சர்ச்சைகள், சவால்கள், நிறைய வெற்றி, தோல்விகளை கடந்து இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தை பிடித்துள்ளார் நயன்தாரா.
You May Like This Video