17 வருஷத்திற்கு பின் பில்லா கெட்டப்பில் மாஸ் காட்டிய நயன்தாரா!! ஒரே வீடியோவால் திரிஷா மார்க்கெட்டே காலி..
சினிமாத்துறையில் பிரபலங்கள் தொழில் ரீதியாக பலவிதத்தில் போட்டிகளை வைத்திருப்பார்கள். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் சகஜமாக பழகுபவர்கள் தான். அப்படி தான் தென்னிந்திய சினிமாவில் சமீப காலக்கட்டத்தில் இருந்து டாப் இடத்தில் இருந்து வருபவர்கள் நயன் தாரா மற்றும் திரிஷா.
இருவரும் டாப் இடத்தில் இருந்த போது ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி மார்க்கெட்டை இழந்துவிடுவார்கள். மாறி மாறி இருவரும் டாப் இடத்திற்கு போட்டி போட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படியில்லை.
ஆனால் தற்போது இருவருக்கும் கடும்போட்டி இருப்பதாகவே இருவரும் மறைமுகமாக நடந்து கொண்டு வருகிறார்கள். திரிஷா தன் மார்க்கெட்டை இழந்தப்பின் 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் மூலம் மிகப்பெரிய மார்க்கெட்டை பிடித்தார்.
விஜய்யின் லியோ ஆரம்பித்து தற்போது மலையாள படம் வரை வரிசைக்கட்டிய படங்களை வைத்து வருகிறார். இடையில் நயன் தாராவும் சில பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட் குறைய ஆரம்பித்தது.
ஆனால், சமீபத்தில் வெளியான ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகிய ஜவான் படத்தின் வீடியோவில் நயன் தாரா லுக் பயத்தை காட்டியிருக்கிறது. அஜித்தின் பில்லா படத்தில் எப்படியொரு லுக்கில் வந்தாரோ, அதேபோல் ஸ்டைலிஷ் லுக்கில் நயன் தாரா மாறியிருக்கிறார்.
துப்பாக்கி, குடும்பபாங்கா சேலை, மற்றும் மாஸ் எண்ட்ரி என்று நயன் தாரா சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட 17 வருடம் கழித்து இப்படியொரு லுக்கிற்கு அட்லீ, நயன் தாராவை மாற்றியிருக்கிறார். இதனால் நயன் தாரா மார்க்கெட் எகிற, திரிஷாவின் ஆட்டம் ஸ்லோவாக இருக்கும் என்று கோலிவுட்டில் பேசி வருகிறார்கள்.
