மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம்.. இயக்குநரை விட குறைவு தான்

Sundar C Nayanthara
By Kathick Mar 07, 2025 02:30 AM GMT
Report

தன்னை இனிமேல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கவேண்டாம் என நயன்தாரா கோரிக்கை விடுத்தது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தாலும், மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

சுந்தர் சி இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்குகிறது. இன்று காலை இப்படத்தின் பூஜையில் நயன்தாரா கலந்துகொண்டார்.

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம்.. இயக்குநரை விட குறைவு தான் | Nayanthara Mookuthi Amman 2 Remuneration

மேலும் இப்படத்தில் ரெஜினா, யோகி பாபு, கருடா ராம் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை ரூ. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக நடிகை நயன்தாரா ரூ. 12 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். மேலும் இயக்குநர் சுந்தர் சி ரூ. 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.