கிழிந்த பேண்ட்!! இரட்டை குழந்தைகளுடன் ஊர் விட்டு ஊர் செல்லும் நடிகை நயன் தாரா - விக்கி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 மாதத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த நயன் தாரா இந்த விசயத்தில் சில பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தார்.

அதன்பின் ஜவான் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன் தாரா சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்று ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
தற்போது தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் ராஜஸ்தானில் நடக்கவுள்ள இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதால் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கிழிந்த பேண்ட்டுடன் தன் குழந்தையை எடுத்துச்செல்லும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



