7000 சதுர அடியில் நயன்தாரா கட்டியுள்ள புதிய ஸ்டூடியோ.. புகைப்படங்கள் இதோ

Nayanthara Vignesh Shivan Actress
By Kathick Mar 16, 2025 02:29 AM GMT
Report

நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4ம் தேதி வெளிவரவுள்ளது. தன்னை இனிமேல் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கவேண்டாம் என நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார். அது சற்று சர்ச்சையானது.

இந்த நிலையில், தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலணியின் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளனர். சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை நிகிதா ரெட்டி என்ற பிரபலத்தின் உதவியால் ஸ்டுடியோவாக வடிவமைத்துள்ளனர்.

7000 சதுர அடியில் நயன்தாரா கட்டியுள்ள புதிய ஸ்டூடியோ.. புகைப்படங்கள் இதோ | Nayanthara New Home Studio

தங்களது பிஸ்னஸ் மீட்டிங், ஓய்வு நேரம், நண்பர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் இந்த ஸ்டுடியோவை பயன்டுத்த போகிறார்களாம். அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, பல கைவிணை பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள், விசாலமான மாடி என இந்த ஸ்டுடியோவை வடிவமைத்துள்ளனர்.

தங்களது ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நயன்தாரா தனது சமுக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ நீங்களே பாருங்க..