நயன்தாராவின் O2 இந்த படத்தின் காப்பியா? புலம்பித் தள்ளும் தயாரிப்பாளர்..
நடிகை நயன் தாரா நடிப்பில் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. ஆசை காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து கல்லாக்கட்டிய நயன் தாரா தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஷாருக்கானின் லயன், கனெக்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது O2 என்ற படத்தில் இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி மிரட்டியது. நயன் தாரா நடிப்பில் சிறப்பான கதைக்களத்துடன் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு படத்தினை பற்றி ஒரு டிவிட் போட்டுள்ளார்.
Sinkhole - 2021 Korean Movie Ithula oru building 500 meter underground la pogum
— Ziaul Irfan (@ZiaulIrfan112) May 16, 2022
Sink Hole - 2013 Sci-fi American Movie Ithula than Shool Bus ulla Pogum Sir Same Concept Neenga Trailer paarunga
Original or Inspiration Anything Credit Kudukalam Thappu illa Bro..
அதில், நம்ம ஊர்ல ஏன் வித்தியாசமா யோசிக்கிறதில்லனு ஆதங்கப்படறாங்கனு, நம்ம ஒரு கதைய தேடி எடுத்துட்டு வந்தா, பல பயலுவ இது எந்த கதையோட ரீமேக்குன்னு கேக்குறாங்க!! உங்க டிசைனே புதுசா இருக்கே! ஏன்டா என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஒரு ரசிகர் Sink Hole என்ற கொரியன் படத்தின் கதையை போல் அப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கு பலர் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தெரியுமா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.