நயன் தாராவை நம்பினது நடிகையிடம் திட்டுவாங்கிய தயாரிப்பாளர்!! வேடிக்கை பார்த்து சிரித்த சிம்பு
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன் தாரா. தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து முதலாம் ஆண்டு பிறந்தநாளையும் கொண்டாட்டிவிட்டார்.
படங்களில் அடுத்தடுத்து நடித்து கொண்டிருக்கும் நடிகை நயன் தாரா பற்றி தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் ஒரு விசயத்தை பகிர்ந்துள்ளார். அதில், வல்லவன் படத்திற்கு பின் நடிகர் சிம்புவுடன் மறுபடியும் ஜோடியாக நயன் நடித்த படம் இது நம்ம ஆளு. பிரபுதேவாவுடன் பிரேக் செய்து சிங்கிளாக இருக்கும் போது தான் அப்படத்தில் நடித்தார்.
சிம்புவுடன் அப்படத்தின் ஷூட்டிங்கின் போது இருவரும் கேரவனில் டிஸ்கஷனில் ஈடுபடுவார் நயன் தாரா. ஒரு நாள் நயன் தேனப்பன் மொபைல் போனை வாங்கி சில நேரம் கழித்து கொடுத்திருக்கிறார். சில நேரம் கழித்து நடிகை கோபிகாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
கால் செய்து பேசிய கோபிகா, என்ன சார் நான் உங்கள் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறேன், நீங்கள் எனக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் செய்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதிர்ச்சியாகிய தேனப்பன் ஒருநிமிடம் இருங்கள் என்று கூறி மெசேஜை பார்த்துவிட்டு நான் அனுப்பவில்லை இதை நயன் தாரா தான் மெசேஜை அனுப்பி இருப்பதாகவும் மன்னித்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இதுபற்றி உடனே சிம்புவுடன் டிஸ்கஷனில் இருந்த நயன் தாராவிடம் கேட்டபோது வாய்ப்பிளந்து சிரித்துள்ளனர் சிம்புவும் நயனும். இப்படியொரு லீலையில் ஈடுபட்டுள்ளார் நயன் தாரா, அதுவும் தயாரிப்பாளர் போனை வாங்கி நடிகைக்கு மெசேஜ் செய்திருக்கிறார் என்பதை பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியிருக்கிறார்.