அஜித்தை பழிவாங்க பெரிய தூண்டில் போட்ட நயன்.. இயக்குனருக்கு ஆப்பு வைத்த விஜய் சேதுபதி..
தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என்ற பெயரோடு பல வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பாலிவுட், கோலிவுட் என பிசியான கால்ஷீட்டில் இருந்து வருகிறார்.
சமீபதில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4ல் நடிக்க கமிட்டாகி இருந்தார். இந்நிலையில் அப்படத்திலியிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளாராம். இதற்கு பின்னணியில் நடிகை நயன்தாரா தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தன் கணவர் விக்னேஷ் சிவனை அஜித் நம்ப வைத்து ஏமாற்றியதால் விரக்தியில் சில நாட்கள் நயன்தாரா இருந்துள்ளார். இதனை எப்படியாவது பழி தீர்க்க பல யோசனைகளை விக்னேஷ் சிவனுக்கு கூறி வருகிறார் நயன்.
அப்படி மாட்டி இருப்பவர் தான் விஜய் சேதுபதி. நயன்தாராவுடன் பல படங்களில் பயணித்து நடித்த நயன், அஜித்துக்கு எழுதிய கதையில் விஜய் சேதுபதியை நடிக்க கேட்டதால் தான் விஜய் சேதுபதி சுந்தர் சி படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம். இதனால் சுந்தர் சி கடும் கோபத்தில் இருப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.