திருமணத்தை கூட காசாக்க பார்க்கும் நயன்தாரா.. சூப்பர் பிளான்
Nayanthara
Vignesh Shivan
By Kathick
நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இதில் சில முக்கிய திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்.
மேலும், சமீபத்தில் தமிழக முதலவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த திருமணத்திற்கு விஜய், அஜித் வருவார்கள் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தங்களுடைய திருமணத்தை ஆவணப்படமாக இயக்க இருக்கிறாராம் இயக்குனர் கவுதம் மேனன். அதனை பிரபல OTT தளமான Netflix-ல் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. தங்களது திருமணத்தை கூட காசாக்க சூப்பர் பிளான் போட்டுள்ளார் நயன்தாரா என்று திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.