கவினுடன் ரொமான்ஸ்.. அந்த நடிகருக்கு அக்கா!! 20 கோடி சம்பளத்திற்கு ஆசைப்படும் நயன் தாரா..
மலையாள சினிமாவில் கதநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி நடிகர் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் ஜோடிப்போட்டு நடித்தார்.
இதனை தொடர்ந்து மண்ணாங்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நயன், நடிகர் கவினுக்கு ஜோடியாக விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கவினுடன் ரொமாண்டிக் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தனர்.
இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யஷ் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் நடிகை நயன் தாரா, யஷுக்கு அக்காவாக நடிக்கவுள்ளாராம்.
இதற்காக 20 கோடி சம்பளமாக நயன் தாரா கேட்டதாகவும் அதனால் நடிகை தபுவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது பெங்களூருவில் நடிந்துவரும் டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங்கில் சத்தமே இல்லாமல் நடிகை நயன் தாரா நடித்து வருகிறாராம்.