கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்...

Vijay Nayanthara Sneha Venkat Prabhu Greatest of All Time
By Edward Sep 18, 2024 08:30 AM GMT
Report

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கோட்.

கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்... | Nayanthara Rejects Vijays Goat Movie Chance Reason

தற்போது வரை படம் வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் கேப்டன் விஜயகாந்த்-ஐ Ai தொழில்நுட்பம் மூலம் இடம்பெறச்செய்தனர். மேலும் திரிஷா மற்றும் சிவகார்த்திகேயனும் சிறப்பு ரோலில் நடித்திருந்தனர்.

நோ சொன்ன நயன்தாரா

இந்நிலையில் நடிகை சினேகாவின் ரோலில் முதலில் நடிக்க ஜோதிகாவிடம் தன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. சூர்யா தரப்பு சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதால் ஜோதிகா அப்படத்தினை நிராகரித்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து சினேகா ரோலில் நடிக்க நடிகை நயன்தாராவை தேர்வு செய்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்... | Nayanthara Rejects Vijays Goat Movie Chance Reason

ஆனால் சில காரணங்களால் நயன் தாரா கோட் படத்தை தேர்வு செய்யவில்லை என கூறியுள்ளார். நடிகை நயன் தாராவின் முன்னாள் காதலரான பிரபுதேவா கோட் படத்தில் விஜய்யுடன் முக்கிய ரோலில் இணைந்து நடிக்கவிருந்ததால் கோட் படத்தில் நடிக்க ஓகே சொல்லாததற்கு காரணம் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.

சினேவுடன் பிரபுதேவா இருக்கும் காட்சிகளும் கோட் படத்தில் இடம்பெற்ற நிலையில் நயன் தாரா எடுத்தது நல்ல முடிவுதான் என்றும் விஜய்க்கு அம்மாவாக எல்லாம் அவர் நடித்து இருந்தால் நன்றாக இருக்காது என்றும் பலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

கோட் படத்தை வேண்டாம்னு ஒதுக்கிய நயன்தாரா!! உண்மையான காரணமே இதுதானாம்... | Nayanthara Rejects Vijays Goat Movie Chance Reason

இதன்பின் நயன் தாரா கோட் படத்தினை பார்த்துவிட்டு சினேகா தான் சிறந்த ஜோடி என்று பாராட்டியதாகவும் வெங்கட் பிரபு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.