நயன்தாராவின் இரண்டாவது பாலிவுட் படம்... சம்பளம் எவ்வளவு தெரியுமா

Nayanthara
By Kathick Apr 03, 2026 02:30 AM GMT
Report

ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமா பக்கம் காலடி எடுத்து வைத்தார் நயன்தாரா. முதல் படத்திலேயே நயன்தாராவிற்கு பாலிவுட்டில் மாபெரும் வெற்றி கிடைத்தது. இதை தொடர்ந்து நயன்தாராவின் இரண்டாவது இந்தி படம் எப்போது? அது எந்த ஹீரோவுடன் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது நயன்தாராவின் இரண்டாவது இந்தி படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

நயன்தாராவின் இரண்டாவது பாலிவுட் படம்... சம்பளம் எவ்வளவு தெரியுமா | Nayanthara Second Bollywood Movie Salary

இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில், இப்படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சல்மான் கானுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். மேலும், சல்மான் கான் இப்படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடிக்கிறார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.