சிம்பு இருந்தா என்னால முடியாது, மற்ற நடிகர்களையும் தூண்டிவிட்ட நயன்தாரா

Nayanthara Simbu Maniratnam
By Tony Jul 21, 2021 03:27 PM GMT
Report

சிம்பு-நயன்தாரா காதல் கதையெல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அந்த வகையில் அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தும் நண்பர்களாக இருந்து வந்தனர் அதற்கு உதாரணமாக தான் இருவரும் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்தனர்.

ஆனால், அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்வது இல்லையாம். அதோடு பொன்னியின் செல்வன் படம் தொடங்கிய போது மணிரத்னம் முதலில் கமிட் செய்தது சிம்புவை தானாம்.

அவரும் ஓகே சொல்ல, பிறகு நயன்தாராவிடம் மணிரத்னம் பேச, சிம்பு இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம்.

அட என்னடா இது என்று மணிரத்னம் தர்மசங்கடமாக, படத்தில் கமிட் ஆன மற்ற நடிகர்களும் நயன்தாரா சொன்னதையே வேத வாக்காக கூறியுள்ளனர்.

பிறகு என்ன மணிரத்னம் கஷ்டம் அறிந்த சிம்பு, சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு, விடுங்க சார் என்று அவரே படத்திலிருந்து விலகினாராம்.