ஜஸ்ட் மிஸ்.. நிம்மதியான நயன்தாரா
நடிகை நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு 10 கோடி ருபாய் வரை சம்பளம் பெறுகிறார் என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது லெஜண்ட் படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்து இருந்த பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுடேலா 20 கோடி ருபாய் சம்பளம் பெறுகிறார் என தகவல் வெளியானது. அதனால் நயன்தாராவின் முதலிடம் பறிபோய்விட்டது என பேச்சு எழுந்தது.
ஒரு அறிமுக நடிகையே இப்படி நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்டாரே எனவும் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகை ஊர்வசி தரப்பு அளித்திருக்கும் விளக்கத்தில் அவர் 20 கோடி ருபாய் சம்பளம் பெற்றதாக வந்த செய்தி உண்மை இல்லை என கூறி இருக்கின்றனர். இருப்பினும் அவர் வாங்கியது மிகப்பெரிய தொகை தான் எனவும் கூறி இருக்கின்றனர்.
இந்த செய்தி வதந்தி என தெரியவந்ததால் தற்போது நயன்தாரா தான் நிம்மதியில் இருப்பார். ஜஸ்ட் மிஸ்.. முதலிடம் மீண்டும் லேடி சூப்பர்ஸ்டாரிடம் வந்துவிட்டது.
